ஆர்எஸ்எஸ் பொறுப்பாளரை கல் வீசி தாக்கிய சம்பவத்தில் 6 பேர் கைது

Home

shadow

       ஆர்எஸ்எஸ் பொறுப்பாளரை கல் வீசி தாக்கிய சம்பவத்தில் 6 பேர் கைது 

       நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமில் பாதுகாப்பு பணியில் இருந்த பொறுப்பாளரை கல்வீசி தாக்கிய புகாரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

      மயிலாடுதுறை தனியார் மெட்ரிக் பள்ளியில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமில் துரை சண்முகம் என்பவர் இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மர்ம கும்பல் சண்முகம் மீது கற்களை வீசி தாக்கி, அவரை தரக்குறைவாக திட்டியுள்ளனர். 

       இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டு ஜாசிக், முகமது சபிக், முகமது அல்பா உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான செய்திகள் :