ஆறுமுகசாமி ஆணையத்திற்குத் தடை - உச்சநீதிமன்றம்

Home

shadow

        ஆறுமுகசாமி ஆணையத்திற்குத் தடை – உச்சநீதிமன்றம்

      மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் புகார் கூறப்பட்டது. அவருடைய மரணம் குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு கடந்த 2017ம் ஆண்டு நியமித்தது.அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், போயஸ் தோட்டத்தில் இருந்தவர்கள் போன்றவர்களை ஆறுமுகசாமி ஆணையம் அழைத்து விசாரித்தது. அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

       மருத்துவர்கள் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை விடுத்த கோரிக்கையை ஆணையம் நிராகரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மேல்முறையீடு செய்தது.

       மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இதன் காரணமாக ஆணையத்தின் விசாரணையில் தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இது தொடர்பான செய்திகள் :