இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார்

Home

shadow

தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை  வாக்குப்பதிவு நடைபெற  இருக்கிறது. இதேபோல, 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நான்கு தொகுதிகளிள்  நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இந்நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும்,  பாதுகாப்பு பணியில் 3,000 போலீசார், 300 துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர் எனவும் கூறினார்.

இது தொடர்பான செய்திகள் :