இந்தியாவில் இருந்து காங்கிரஸ் என்று அகற்றப்படுகிறதோ அன்று வறுமை இருக்காது - ராஜ்நாத் சிங்

Home

shadow

            இந்தியாவில் இருந்து காங்கிரஸ் என்று அகற்றப்படுகிறதோ, அன்று வறுமையும் இருக்காது என  மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், ஹெளரா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங்இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றதில் இருந்து, நாட்டில் வறுமையை ஒழிப்போம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்து வருவதாகவும் இப்போது ராகுல் காந்தியும் அதே வாக்குறுதியை அளித்துள்ளார் என தெரிவித்தார், ஆனால், இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி எப்போது அகற்றப்படுகிறதோ, அப்போதே வறுமையும் அகற்றப்படும் என தெரிவித்த அவர் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ்  அரசில், ஜனநாயகம் குழித் தோண்டி புதைக்கப்பட்டுவிட்ட்து எனவும் தெரிவித்தார். மேலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சர்வாதிகார ஆட்சியால் மாநில மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தை மீட்கும் வரை தாங்கள் போராடுவோம் எனவும் ராஜ்நாத் சிங்.தெரிவித்தார்

இது தொடர்பான செய்திகள் :