இளமை துள்ளும் ரஜினி : வெளியான தர்பார் படப்பிடிப்பு புகைப்படங்கள்

Home

shadow

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும், ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது 

ரஜினி நடிக்கும், ‘தர்பார்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும், ‘தர்பார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இந்தப் படத்தின் தலைப்பை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். ரஜினிக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்று தொடர்ந்து ஊகங்கள் உலவி வந்தன. பெண் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, ‘தர்பார்’ படத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில், ‘தர்பார்’ படத்தில் நயன்தாரா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நயன்தாரா ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்திருக்கிறது. ரஜினி இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடிக்கிறார் என்றும் செய்திகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. நயன்தாரா ரஜினியின் காதலியாக நடிப்பாரா, அல்லது மனைவி வேடத்தில் நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :