உத்தரப்பிரதேசம் – பிரியங்கா மீது குற்றச்சாட்டு

Home

shadow


       உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் பிரியங்கா, லால் பகதூர் சாஸ்திரியை அவமதித்துவிட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி, உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலைக்கு நேற்று மரியாதை செலுத்தினார். சாஸ்திரி சிலைக்கு மாலை அணிவிக்கும் வீடியோவினை சுட்டிக்காட்டி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், பிரியங்காவின் அகந்தை இந்த வீடியோவில் அவர் செய்யும் செயலில் தெளிவாக தெரிகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை எடுத்து, லால் பகதூர் சாஸ்திரியின் சிலைக்கு தன் கைகளால் போடுகிறார் எனவும், இதன்மூலம் பிரியங்கா, மரியாதை செய்வதாக கூறி அவரை அவமரியாதை செய்துவிட்டார் எனவும் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :