உற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி

Home

shadow

              கொள்முதல் விலையும் விற்பனை விலையும் கணக்கிட்டுத்தான் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிச்சாமி, கொள்முதல் விலையும் விற்பனை விலையும் கணக்கிட்டுத்தான் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பால் கொள்முதல் மற்றும்  விற்பனை விலை உயர்த்தப்படும் என ஏற்கனவே பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும்  பால் உற்பத்தியாளர்களின் பல சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கிக் வருவதால் தான் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதாகவும் எல்லா மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பால் கொள்முதல் விலை அதிகம்  என தெரிவித்தார். 

இது தொடர்பான செய்திகள் :