உலகக் கோப்பை லீக் தொடர் – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்

Home

shadow

            உலகக் கோப்பை லீக் தொடர் – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்

            உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

            இங்கிலாந்தின் டவுண்டன் (Tounton) கவுண்டி மைதானத்தில் நடைபெறவுள்ள 17ஆவுது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.

            இதுவரை 3 போட்டிகளில் விளையாடி பாகிஸ்தான் அணி ஒரு  போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியும் 3 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் இரண்டில் வெற்றிப்பெற்றுள்ளது.

            ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோனிஸ் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் களம் இறங்குகிறார்.

            பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சொதப்பி வரும் பாகிஸ்தான் அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் மோதி வெற்றி பெறுமா என்பதில் சந்தேகம்தான்.

             இதனிடையே கடந்த இரண்டு லீக் போட்டிகளிலும் மழை வந்தது போல, இப்போட்டியிலும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான செய்திகள் :