உலகளவில் புலிகள் வாழ்வதற்கான சிறந்த சூழல் மண்டலத்தை இந்தியா கொண்டுள்ளது - பிரதமர் மோடி

Home

shadow

                         உலகளவில் புலிகள் வாழ்வதற்கான சிறந்த சூழல் மண்டலத்தை இந்தியா கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சர்வதேச புலிகள் தினத்தையொட்டி இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். அப்போது உரையாற்றிய அவர், வனப் பாதுகாப்பின் அம்சங்களில் ஒன்றாக புலிகள் உள்ளதாக குறிப்பிட்டார்.புலி இனத்தை அழிவில் இருந்து காக்க மத்திய அரசு முழு முயற்சியுடன் செயல்பட்டு வருவதாக கூறிய பிரதமர், இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டை ஒப்பிடுகையில், கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் புலிகள் எண்ணிக்கை 33 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறினார். கடந்த 2014ல் இரண்டாயிரத்து 226 ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை, கடந்தாண்டு இரண்டாயிரத்து 967 ஆக அதிகரித்திருந்தது அனைவருக்கும்  மகிழ்ச்சியான விஷயம் என்று பெருமிதம் தெரிவித்தார்

இது தொடர்பான செய்திகள் :