எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டால் ஜாமினில் விடுவிக்க தயார்

Home

shadow

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை விமர்சித்து மீம்ஸ்  போட்ட மேற்கு வங்க பா.ஜ.க நிர்வாகியை மன்னிப்பு கேட்க கூறியிருக்கிறது  உச்ச நீதிமன்றம்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா MET GALA விழாவில் வித்தியாசமான உடை, மேக்கப்புடன் வலம் வந்தார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. அவருடைய புகைப்படத்தை வைத்து மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை விமர்சித்து மீம்ஸ்  ஒன்று சமூகவலைத்தளங்களில் உலா வந்தது. அந்த புகைப்படம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகைப்படத்திற்கு கடும் ஏதிர்ப்பு கிளம்பியதையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்புகைப்படத்தை மேற்கு வங்க பா.ஜ.க நிர்வாகி பிரியங்கா சர்மா என்பவர் வெளியிட்டார் என கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.  அவர் கைதை எதிர்த்து மேற்கு வங்க பாஜக சார்பில், நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரியங்கா ஷர்மா எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டால் ஜாமினில் விடுவிக்க தயார் என தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :