ஏழைகளின் வீடுகளில் எங்காவது காவலாளியை பார்தது உண்டாஎன ராகுல் காந்தி கேள்வி

Home

shadow

                        பணக்காரர்கள் மட்டுமே வாசலில் காவல்காரர்களை நிறுத்தி வைப்பார்கள்; ஏழைகளின் வீடுகளில் எங்காவது காவலாளியை பார்தது உண்டாஎன ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலத்தில் இன்று முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். புர்னியா மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், 5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, அனைவரின் வங்கிக் கணக்குகளிலும் 15 லட்சம் ரூபாய், விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்று கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனது ஏன்என்று பிரதமர்மோடிஎப்போதாவது விளக்கம் அளித்திருக்கிறாராஎனவும், தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏதாவது செய்திருக்கிறாராஎனவும்கேள்விஎழுப்பினார். மேலும், மக்களின் காவலாளி என்று கூறும் மோடி இந்த நாட்டின் பணக்காரர்களுக்கு மட்டுமே காவலாளியாக இருக்கிறார்எனவும், பணக்காரர்கள் மட்டுமே வாசலில் காவல்காரர்களை நிறுத்தி வைப்பார்கள். ஏழைகளின் வீடுகளில் எங்காவது காவலாளியை பார்த்தது உண்டாஎனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் பலகாலமாக கஷ்டப்பட்டு பெண்கள் சேமித்து வைத்திருந்த பணம்கூட பறிக்கப்பட்டதுஎனக்குறிப்பிட்டராகுல்காந்தி, வசதி படைத்தவர்களின் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடனை தள்ளுபடி செய்ய முடிந்த மோடி அரசால், ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியாமல் போனது ஏன்எனவிமர்சித்துள்ளார். அதேபோல், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் குறைந்தபட்ச வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் நிதியுதவி திட்டத்தை நிச்சயமாக தாங்கள் நடைமுறைப்படுத்துவோம்எனவும்உறுதியளித்தார்.

இது தொடர்பான செய்திகள் :