ஐ.பி.எல். டி20 கிரிகெட் போட்டி

Home

shadow


பஞ்சாப் அணிக்கு எதிரான .பி.எல். போட்டியில் சென்னை அணி 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பஞ்சாபில் நேற்றிரவு நடைப்பெற்ற போட்டியில் சென்னை சூபபர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க முதலே அதிரடி காட்டிய பஞ்சாப் அணி அதிவேக ரன் குவிப்பில் ஈடுபட்டது. 22 பந்துகளில் அரை சதம் கிறிஸ் கெய்ல், 63 ரன்கள் குவித்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடி சென்னை அணி, 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. அபாரமாக ஆடிய தோனி 79 ரன்கள் குவித்தார்.

                முன்னதாக மாலை 4 மணிக்கு நடைபெற்ற போட்டியில் பெங்களூ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் முதலில் விளையாடி ராஜஸ்தான் அணி 217 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடி பெங்களூரு அணி 198 ரன்கள் மட்டுமே எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

இது தொடர்பான செய்திகள் :