கன்னியாகுமரி மாவட்டத்தில் திடீர் கடல் சீற்றம்

Home

shadow


கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு கடலோர பகுதிகளில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் மீனவ மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முதல்   மேற்கு கடலோர பகுதிகளில் ராட்ஷச அலைகள் அதிகரித்து காணப்படுகிறது. அலைகள் வேகம் அதிகமாக காணப்படுவதால்   தூண்டில் வளைவு மற்றும்,தடுப்புச்சுவரை தாண்டி தண்ணீர் ஊருக்குள் புகுந்து வருகிறது. இதனால் அழிக்கால், வள்ளவிளை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கடல் நீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. ராட்சஷ அலைகள் எழும் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கமாறு பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் கடல்நீர் வீடுகளுக்குல் புகுவதால் பெரிதும் பாதிப்புக்குள்ளாவதாக பொதுமக்கள் குற்றம் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :