கமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட மனு - தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

Home

shadow

                கமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட மனு - தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்


               இந்து தீவிரவாதம் குறித்து பேசியது தொடர்பாக, கமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

              இந்து தீவிரவாதம் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்து, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு எதிராக, பாஜக சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் நடைபெற்ற சம்பவத்துக்காக டெல்லியில் வழக்கு தொடருவது ஏன் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பாஜக வழக்கறிஞர், தேர்தல் ஆணையத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார். 

             அப்போது, கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு தொடர்பாக, தமிழகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கமல்ஹாசனுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இது தொடர்பான செய்திகள் :