கரக்பூர் - சிந்து சமவெளி நாகரிக அழிவு

Home

shadow


உலகின் மிகத் தொன்மையான சிந்து சமவெளி நாகரிகம், 900 ஆண்டுகள் தொடர்ச்சியாக நிலவிய வறட்சி காரணமாக அழிந்திருக்கலாம் என கரக்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம், கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் புவியியல் ஆய்வாளர்கள், கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளில் உலகில் நிலவிய பருவநிலை மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இதில், வடமேற்கு ஹிமாலயப் பகுதிகளில், கி.மு. 2,350 முதல் கி.மு. 1,450 வரை சுமார் 900 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக மழை பொய்த்ததன் காரணமாக அங்குள்ள ஒட்டுமொத்தப் பகுதிகளும் வறட்சியால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வறட்சியால் பல வற்றாத நதிகள் கூட வறண்டுபோனதால் அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள், தங்கள் வாழ்வாதாரத்துக்காக கிழக்கு மற்றும் தென் பகுதிகளை நோக்கி புலம்பெயர்ந்ததும் தெரிய வந்துள்ளது. இதனாலேயே, உலகில் தொன்றுதொட்டு சிறந்து விளங்கிய சிந்துசமவெளி நாகரிகம், 4 ஆயிரத்து 350 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்ததாக கரக்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வறிக்கை, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆய்விதழான எல்செவியரின் காலாண்டிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் மூலம், படையெடுப்பால் சிந்து சமவெளி நாகரிகம் அழிந்திருக்கலாம் என்ற கருத்தியல் முடிவுக்கு வந்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :