காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்திற்கும் இலங்கை தமிழர்களுக்கும் துரோகம் இழைத்தவர்கள் : பொன் ராதா கிருஷ்ணன்

Home

shadow

                                          2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்திற்கும் இலங்கை தமிழர்களுக்கும் துரோகம் இழைத்தவர்கள் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு பாரதிய னதா ட்சியனர்  மற்றும் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இதில் பங்கேற்ற பொன் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதா கிருஷ்ணன்ம், அம்பேத்கர் எப்படியான இந்தியாவை உருவாக்க நினைத்தாரோ அதன் படி அவரது வழியில் தாங்கள் பயணித்து வருகிறோம் எனவும் .ஒடுக்கப்பட்ட புறந்தள்ளப்பட்ட நிலையில் இருந்த மக்கள் மேல் எழுந்து வர வேண்டும், சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களும் சமம் என்ற நிலையை உருவாக வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார் என தெரிவித்தார். மேலும் 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என கேள்வி எழுப்பிய ராதா கிருஷ்ணன்தமிழகத்திற்கும் இலங்கை தமிழர்களுக்கும் துரோகத்தை மட்டுமே அவர்கள் இழைத்தாக தெரிவித்தார். 

இது தொடர்பான செய்திகள் :