காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருவாய் திட்டம் : பொய்யான வாக்குறுதி - நிதின் கட்கரி

Home

shadow

காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருவாய் திட்டம் பொய்யான வாக்குறுதி என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர்  நிதின் கட்கரி விமர்சித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம், பாதல்கான் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர்  நிதின் கட்கரி, முன்னாள் பிரதமர்கள் ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி போன்றோர் வறுமையை ஒழிப்போம் என்ற வாக்குறுதியை அளித்த போது மக்களும் அவர்களை நம்பி காங்கிரஸுக்கு வாக்களித்தாகவும், ஆனால் அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என தெரிவித்தார். இதேபோல் தற்போது ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனும் பொய்யான வாக்குறுதியை ராகுல் காந்தி அளித்துள்ளதாகவும் கூறினார்.இந்த திட்டத்திற்கான நிதி எப்படி கிடைக்கும் என கேள்வி எழுப்பிய அவர், . மக்களை திசைதிருப்புவதே காங்கிரஸ் கட்சி கொள்கையாக கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :