காஞ்சிபுரம் - அத்தி வரதர் தரிசனம்

Home

shadow

         காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.  பொதுமக்களின் தரிசனத்திற்காக  உற்சவர் அத்திவரதர் சிலை வரதராஜ பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்பதாம் நாளான நேற்று சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசனம் செய்ததாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை அத்திவரதரை தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இது தொடர்பான செய்திகள் :