காஞ்சிபுரம் - குடிநீர் கேட்டு மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Home

shadow

                                                                  காஞ்சிபுரம் அடுத்த  திம்மராஜம்பேட்டை பகுதி மக்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம்  திம்ம ராஜபாட்டையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து  பலமுறை  நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் குடிநீர்  வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காஞ்சிபுரம் - தாம்பரம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த வாலஜாபாத் ஆய்வாளர் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால் காஞ்சிபுரம் தாம்பரம் சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது தொடர்பான செய்திகள் :