காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 6 பேர் சடலமாக மீட்பு

Home

shadow

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 6 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 6 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சரவணன், அவரது மனைவி ஜோதிமணி, மற்றும் ஒரு பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சரவணனின் மகன்களான, தீபகேஷ், தரகேஷ் உட்பட 3 பேரை தேடும் பணி  நடைபெற்று வருகிறது. ஆற்றில் மணல் அள்ளப்பட்டதால் ஏற்பட்ட பள்ளமான பகுதிக்கு 6 பேரும் சென்றதால், இந்த விபத்து நிகழ்ந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :