காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Home

shadow

                               காஷ்மீரில் சோபியான் மற்றும் பந்திப்போரா மாவட்டங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்முகாஷ்மீர் மாநிலம் சோபியானில் வீடு ஒன்றில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இதேபோல் பந்திப்போரா மாவட்டம் ஹஜின் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வேறு பயங்கரவாதிகள் யாரேனும் பதுங்கி உள்ளனரா என பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காஷ்மீரில் 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :