கிறைஸ்ட்சர்ச் நகர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து நியூசிலாந்து நாட்டில் தானியங்கி துப்பாக்கிகளுக்கு தடை

Home

shadow

                கிறைஸ்ட்சர்ச் நகர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து நியூசிலாந்து நாட்டில் தானியங்கி துப்பாக்கிகளுக்கு தடை விதித்து அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா உத்தரவிட்டுள்ளார்.


நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள இருவேறு  மசூதிகளில், கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து நடைபெற்ற துப்பாக்கிச் சூடு  தாக்குதலில் 5 இந்தியர்கள் உள்பட 50 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து நியூசிலாந்தில் துப்பாக்கி பயன்பாட்டிற்கு கட்டுபாடு கொண்டு வரப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அறிவித்திருந்தார். அதன்படி ராணுவ வகை தானியங்கி மற்றும் உயர் ரக குண்டுகள் அடங்கிய தாக்குதல் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை நியூஸிலாந்தில் பயன்படுத்த தடை விதித்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் உத்தரவிட்டுள்ளார்

இது தொடர்பான செய்திகள் :