குடிநீர் குழாய் உடைந்து 10 நாட்களாக வீணாக செல்லும் தண்ணீர்

Home

shadow

 

        குடியாத்தம் அருகே மேட்டூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து கடந்த 10 நாட்களாக வீணாக செல்லும் தண்ணீரை சரி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம்,குடியாத்தம் நகருக்கு மேட்டூர் குடிநீர் குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குடிநீர் பைப்பு கடந்த 10 நாட்களாக குடியாத்தம் ரயில்நிலையம் அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடமும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதால், பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக கீழே செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தண்ணீர் குழாயை சரி செய்ய வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :