கும்பக்கோணத்தில் தென்னக திருப்பதி என்று போற்றப்படும் உப்பிலியப்பன் திருக்கோவில் பங்குனி திருவிழா

Home

shadow

                                  தஞ்சாவூர் மாவட்டம் கும்பக்கோணத்தில் தென்னக திருப்பதி என்று போற்றப்படும் உப்பிலியப்பன் திருக்கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கும்பகோணத்தில் 108திவ்ய தேசங்களில் புகழ் பெற்றதும் நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார் பொய்கையாழ்வார் பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பூலோக வைகுந்தம் என்று போற்றப்படும் உப்பிலியப்பன் திருத்தலத்தில் பங்குனி மாத திருவிழாஇன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.இன்றுமாலை தொடங்கிய இந்தவிழாவானது பல சிறப்பு நிகழ்ச்சிகளுடன் 10 நாட்கள்நடைபெறுகிறது. ஆதிசேட வாகனம், வெள்ளிகருட வாகனம், அனுமந்தவாகனம் யானைவாகனம் என ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வாகனத்தில் வலம் வரும் உப்பிலியன் விழாவின்முக்கியதினமான ஒன்பதாம் நாள் ஸ்ரீ தேசிகனோடு திருத்தேரில் எழுந்தருளுகிறார். இந்தவிழாவில் தஞ்சை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பெருந்திரளாககலந்து கொள்வர்

இது தொடர்பான செய்திகள் :