கொடைக்கானல் – சிறுவர் பூங்கா ஆபத்து

Home

shadow

  

         கொடைக்கானலில் பராமரிப்பற்ற நிலையில் உள்ள சிறுவர் பூங்காவினால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக  அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்

  கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கி கிராமத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. தற்போது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி ஆள்நடமாற்றமின்றி காணப்படுகிறது. இதனால் இங்கு விஷப்பூச்சிகளும் விஷப்பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. பூங்காவின் அருகிலேயே அங்கன்வாடி மையம் மற்றும்  ஊராட்சி துவக்கப் பள்ளி அமைந்திருப்பதால் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுமோ என பெற்றோர் மற்றும் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து வில்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதற்கு முன் பூங்காவை சுத்தப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :