கோவை, தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்ற குழந்தைகளின் நடனம் காண்போரை கவர்ந்தது.

Home

shadow

                  கோவை, தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்ற குழந்தைகளின் நடனம் காண்போரை கவர்ந்தது.

கோவை, மணியகாரன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் 22வது ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் குழந்தைகளுக்கான கட்டுரை போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டி, நடன போட்டி என பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன, இந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளை பாராட்டும் விதமாக அவர்களுக்கு கோவை மலையாளி சமாஜத்தின் தலைவர் ராஜகோபாலன் மற்றும் பள்ளி அறங்காவலர் முரளி, தலைமையில் பாராட்டு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கபட்டன. இதனை தொடர்ந்து நடைபெற்ற குழந்தைகளின் நடன நிகழ்ச்சி காண்போரின் மனதை கவர்ந்தது. இந்த விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏரளமானோர் கலந்து கொண்டனர்

இது தொடர்பான செய்திகள் :