சசிகலா முன்கூட்டி விடுதலையாக வாய்ப்பில்லை – முன்னாள் டிஐஜி ரூபா

Home

shadow

            சசிகலா முன்கூட்டி விடுதலையாக வாய்ப்பில்லை – முன்னாள் டிஐஜி ரூபா

           சசிகலா தண்டனை காலத்திற்கு முன்பே விடுதலை செய்யப்பட வாய்ப்பில்லை என முன்னாள் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.

           சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று தற்போது பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா, நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. 

          இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள, ஐபிஎஸ் அதிகாரி ரூபா, நன்னடத்தை அடிப்படையில் சிறையில் இருந்து முன்கூட்டியே கைதிகள் விடுதலையாக சில விதிமுறை உள்ளதாகவும், அது இந்த வழக்கில் பொருந்தாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

         சசிகலா விவகாரத்தில், சிறை சட்டப்படி முன்கூட்டியே விடுதலை என்ற கேள்விக்கே இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

         ரூபா, சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக இருந்தபோதுதான், சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்டதை அம்பலப்படுத்தினார்.

இது தொடர்பான செய்திகள் :