சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சீவேலி சிவேலி புறப்பாடு நிகழ்ச்சி

Home

shadow

  

         குளித்தலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சக்கரபீடத்தில் ஸ்ரீ சுரேஷ்வரரின் சீவேலி புறப்பாடு நடைபெற்றது.

கரூர் மாவட்டம் குளித்தலையில்  சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சக்ரபீடத்தில் ஸ்ரீ சுரேஷ்வரரின் சீவேலி புறப்பாடு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சீவேலி புறப்பாடு நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.  இதில் பகவான் என்று அழைக்ககூடிய சுரேஷ்வரர் பெண் வேடமிட்டு கையில் ஆயுதத்துடன் நடனமாடிக்கொண்டே கடம்பர்கோவிலை சுற்றிவந்து சபாபதிநாடார் தெருவில் உள்ள அவருடைய சக்ரபீடம் சென்றடைந்தார். மேலும் பக்தர்கள்  ஒவ்வொருவரும் பழங்கள், தானியங்கள், தென்னங்குறுத்து, நெற்பயிர் ஆகியவகளை எடுத்துகொண்டு அவர் பீடம் நோக்கி சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இது தொடர்பான செய்திகள் :