சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள்

Home

shadow


        சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, நாடு முழுவதும் பலத்தப்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

சுதந்திர தினத்தன்று, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி உரையாற்ற உள்ளார். இதேபோல் அந்தந்த மாநில தலைநகரங்களில் சுதந்திர தின விழாக்கள் கோலாகலமாக நடைபெற உள்ளன. இந்நிலையில், சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. அரசு சார்பில் சுதந்திர தின விழா நடைபெறும் இடங்களில் கூடுதல் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்படுள்ளது. சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வரும் 22-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :