சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி பவள விழாவில் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.

Home

shadow


      பெண் கல்வியில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிப்பதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநிலக் கல்லூரி பட்டமளிப்பு விழா மற்றும் எத்திராஜ் மகளிர் கல்லூரி பவள விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், தென்னிந்தியாவின் பெருமைமிகு கல்லூரிகளில் மாநிலக் கல்லூரிக்கு முக்கிய இடமுண்டு என்று புகழாரம் சூட்டினார்நோபல் பரிசு வாங்கிய சர்.சி.வி.ராமன், ராஜாஜி, ஜெனரல் கரியப்பா உள்ளிட்டோர் இந்த கல்லூரியில் படித்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழும் தமிழ்நாடும் தன் மனதிற்கு நெருக்கமானவை என்று கூறிய அவர், தாய் மொழியை யாரும் மறக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்இந்தியாவின் தத்துவம் பகிர்தலும் அன்பு செலுத்துதலும்தான் என்றும் வெங்கையா நாயுடு கூறினார். எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பேசிய அவர், பெண் கல்வியில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாகவும் சமுதாய முன்னேற்றத்திற்கு கல்வியே சிறந்த பங்கு வகிக்கிறது என்றும் தெரிவித்தார். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு குடும்பமே உயரும் என்றும் ஆனால் வேலைவாய்ப்பிற்காக மட்டும் கல்வி கற்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார். அறிவாற்றல், சிந்தனை, செயல்திறன், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் நம்மை முன்னேற்றமடையச்செய்வதுதான் கல்வி என்று குறிப்பிட்ட அவர் தற்போது அனைத்துத் துறைகளில் பெண்கள் உள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்

இது தொடர்பான செய்திகள் :