சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Home

shadow

தென்மேற்கு வங்கக் கடலில் அடுத்த வாராம் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும்  இந்தப் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்  இந்தியப் பெருங்கடல், அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் வியாழக்கிழமை நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 27ஆம் தேதி  காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என தெரிவித்தார். தொடர்ந்து, இது மேலும் வலுவடைந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக மாறி 29 ஆம் தேதி தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும்  இந்தப் புயல் உருவானால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வரும் திங்கள்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழையை எதிர்பார்க்கலாம் என தெரிவித்தார். மேலும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் நாளை முதல் சனிக்கிழமை வரை இந்தியப் பெருங்கடல், அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். இந்த நாள்களில் இந்தியப் பெருங்கடல், அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுவதாக தெரிவித்தார்.  வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காற்றுடன் கூடிய மழை பெய்த்தாகவும் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஆத்தூரில் 100 மில்லி மீட்டர் மலையும் தேனி மாவட்டம் பெரியகுளம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, சங்ககிரியை அடுத்த துர்க் ஆகிய இடங்களில் தலா 60 மில்லி மீட்டர் மழையும் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தலா 40 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.


இது தொடர்பான செய்திகள் :