சென்னை விமான நிலையத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

Home

shadow

                  சென்னை விமான நிலையத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஹாங்காங்கில் இருந்து இன்று காலை சென்னை வந்த விமானத்தில் பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தென்கொரியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களின் பைகளை சோதனையிட்டபோது, அவர்கள் இருவரும் 24 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வந்த 2 பெண்களிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரும் சென்னையில் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தார்கள் என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இது தொடர்பான செய்திகள் :