சென்னை - சட்டப்படிப்பு கலந்தாய்வு தொடக்கம்

Home

shadow


சென்னை, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கலையரங்கில், நிகழாண்டுக்கான சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இரண்டு நாள் கலந்தாய்வு இன்று தொடங்கியது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டக்கல்லூரி, சீர்மிகு சட்டப்பள்ளி மற்றும் திண்டிவனத்தில் உள்ள தனியார் சட்டக்கல்லூரி ஆகியவற்றிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 28ம் தேதி முதல் வழங்கப்பட்டன. மொத்தம் 3 ஆயிரத்து 351 விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாகவும், நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டது. இதில், 2 ஆயிரத்து 790 விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, கடந்த மாதம் 28ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், சட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை பூம்பொழில் வளாகத்தில் உள்ள டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக கலையரங்கில் இன்று தொடங்கியுள்ளது. கலந்தாய்வு நாளையும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சட்டப்படிப்புக்கான வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கப்படும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :