சேலத்தில் கனமழை - பாதுகாப்பு காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை

Home

shadow

                    சேலத்தில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் கோடை வெப்பம் தணிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கடந்த சில நாட்களாகவே சேலத்தில் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அயோத்தியாபட்டனம், ஆச்சாங்குட்டப்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வடிந்தோடுகிறது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாயினர். இதனிடையே பாதுகாப்பு காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மிகுந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் மதுரை, கரூர் ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.

இது தொடர்பான செய்திகள் :