சோவியத் யூனியனில் வைர சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது

Home

shadow

1955 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் நாள் சோவியத் ஒன்றியத்தில்  முதன் முதலாக வைரம் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டு வைரம் எடுக்கப்பட்டது. Mir mine என்ற முதல் வைரச் சுரங்கம் சோவியத் ஒன்றியத்தில் Yuri Khabardin என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்றிணைந்த சோவியத் யூனியனின் புவியியலாளர்கள் வைரங்கள் இருக்கக்கூடிய Kimberlite என்னும் எரிமலை கல் தடயங்களை கண்டுபிடித்தனர். இது வைரங்களுடன் தொடர்புடைய ஒரு வகை கல். 1940 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரை நடந்த வைர சுரங்களுக்கான தேடலில் ஒன்றிணைந்த சோவியத் யூனியனில் புவியியலாளர்கள் தேடி கண்டுபிடித்த 2ஆவது வைரச் சுரங்கம் ஆகும். முதலாவது Zarnita என்ற சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் Mir mine சுரங்கமே முதன் முதலில் வைரம் எடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. சோவியதில் வைரங்கள் வெட்டி எடுக்கப்பட்ட முதல் சுரங்கம் இதுவே. 1955 முதல் 59 ஆண்டுகள் வரை செயல்பட்டுக் கொண்டு இருந்த இந்த வைர சுரங்கம் 2004 ஆம் ஆண்டு மூடப்பட்டது. இப்போதைய ரஷ்யாவின் siberia பகுதியில் உள்ள இந்த சுரங்கத்தில் ஆண்டொன்றுக்கு ஒரு கோடி கேரட் அதாவது 2,000 கிலோ எடைக்கொண்ட வைரம் வெட்டி எடுக்கப்பட்டது. சோவியத் யூனியன் பிரிவுக்கு பிறகு தனியார் நிறுவனத்துக்கு ஏலம் விடப்பட்டு வைரம் தயாரிக்கும் பணிகள் தொடரப்பட்டது. இந்த கண்டுபிடிப்பிற்காக, 1957 ஆம் ஆண்டில் Yuri Khabardin “லெனின் பரிசுவழங்கப்பட்டது. இது சோவியத் யூனியனின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்று

இது தொடர்பான செய்திகள் :