ஜம்மு காஷ்மீர் - பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மேஜர் உள்பட 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

Home

shadow

                              ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மேஜர் உள்பட 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.


ஜம்மு காஷ்மீர் மாநிலம், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டியுள்ள நவ்ஷேரா பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், ராணுவ வீரர்களை குறிவைத்து வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ மேஜர் உள்பட 2 வீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இது தொடர்பான செய்திகள் :