ஜல்சக்தி முதல் ஆலோசனை கூட்டம் - அமைச்சர் வேலுமணி பங்கேற்பு

Home

shadow

            ஜல்சக்தி முதல் ஆலோசனை கூட்டம் - அமைச்சர் வேலுமணி பங்கேற்பு

             மத்திய அரசின் ‘ஜல்சக்தி’ துறையின் முதல் ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டுள்ளார்.

             குடிநீர் ஆதாரங்களை பாதுகாத்து மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கு உயர்தர குடிநீர் பாசன வசதிகளை உறுதி செய்வதற்காக ஜல்சக்தி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

             ஜல்சக்தி துறையின் அமைச்சராக கஜேந்திர சிங் ஷெகாவத் நியமிக்கப்பட்டார். இந்த துறையின் முதல் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில நீர்வளத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்ள வேண்டுமென ஏற்கனவே அழைப்பிதழ் விடுக்கப்பட்டிருந்தது.

            அதன் படி, தமிழகம் சார்பில் உள்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டுள்ளார்.

           கூட்டத்தில் தங்களுடைய மாநிலங்களில் நிலவும் குடிநீர் பிரச்சனைகள் பற்றி அனைத்து மாநில அமைச்சர்கள் எடுத்துரைப்பார்கள் என தெரிகிறது.

          இதனிடையே, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை, அமைச்சர் வேலுமணி சந்தித்தார்.அப்போது கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், கூட்டு குடிநீர் திட்டம், மழை நீர் சேகரிக்கும் திட்டங்களுக்கு 5 ஆயிரத்து 358 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிட வேண்டுமென கோரிக்கை மனு அளித்தார்.

இது தொடர்பான செய்திகள் :