ஜார்கண்ட் மாநிலத்தில் துப்பாக்கிச் சண்டையில் நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Home

shadow

                           ஜார்கண்ட் மாநிலத்தில் நச்கல் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நக்சல் ஆதிக்கம் மிகுந்த ஜார்கண்ட் மாநிலத்தில், சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் சிறப்பு படையினர், நக்சல் ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பெல்பாகாட் எனும் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் இன்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுப்படிருந்த போது, அங்கு பதுங்கி இருந்த நக்சல்களுடன் துப்பாக்கிச் சண்டை மூண்டுள்ளது. இந்த சண்டையில் 2 நக்சல் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு ஏகே42 ரக துப்பாக்கி, 3 துப்பாக்கிகள், 4 பைப் குண்டுகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சண்டையில், சிஆர்பிஎப் வீரர் ஒருவரும் வீரமரணமடைந்தார்.

இது தொடர்பான செய்திகள் :