ஜூன் 25ல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் – தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு அழைப்பு

Home

shadow

          ஜூன் 25ல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் – தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு அழைப்பு

 

       காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் வரும் ஜூன் 25ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம், கேரளம், கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

        மேட்டூர் அணையை நம்பி தமிழகத்தில் 12 டெல்டா மாவட்டங்களில் முப்போக சாகுபடிகள் நடைபெற்று வந்தது.

        ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஒரு போகம் சாகுபடி மட்டுமே தற்போது செய்யப்படுகிறது.

 

      இதனிடையே, காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்றது. அப்போது ஏற்கெனவே நடைபெற்ற கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.19டி.எம்.சி நீரை தரவேண்டும் என்று கர்நாடகாவை, தமிழக அரசு வலியுறுத்தியது.

 

       ஆனால் கர்நாடகா அரசு இதுவரை தமிழகத்திற்கு நீர் திறந்து விடவில்லை. இதனால், வருகிற 25-ம் தேதி நடைபெற இருக்கும் காவிரி மேலாண்மை கூட்டம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :