தமிழகத்தில் வறட்சியால் தவிக்கும் டெல்டா மாவட்டங்கள்

Home

shadow

              தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்த நிலையில் மக்கள் அனைவரும் தண்ணீருக்காக போராடி வருகின்றனர்.காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு பிறகு 2018 டிசம்பரிலிருந்து மாதம் தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு முறையாக திறந்து விடவில்லை. 
 
            இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக காவேரியில் முறையாக நீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்கள் வறட்சியால் தவிக்கின்றன. கர்நாடக அரசிடம் நீர் திறக்க அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துவரும் நிலையில், இது குறித்து கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சரிடம் கேட்கப்பட்ட போது, "காவிரியில் தண்ணீர் திறக்க இது சரியான தருணம் அல்ல. 

         இங்கேயே மழை இல்லை. மழை பெய்தால் தண்ணீர் திறப்பதை பற்றி பார்ப்போம்" என தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான செய்திகள் :