தமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Home

shadow

                  தமிழகத்தில்,  நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன?  என, அறிக்கை அளிக்குமாறு, பொதுப்பணித்துறை முதன்மை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலியை சேர்ந்த சுந்தரவேல்  என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திருநெல்வேலி  பிரான்ஞ்சேரி குளம் மற்றும் சுப்ரமணியபுரம் குளம் ஆகிய குளங்களில்   தூர்வாரும் பணி நடைபெற்றது. அரசு விதிப்படி கண்மாய், குளங்களை தூர்வாரிய பின்னர், அதை சமம் செய்து தண்ணீர் சேமிக்க வழி செய்ய வேண்டும். தூர்வாரும் பணிகளில் இத்தகைய விதியை பின்பற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி அடங்கிய அமர்வு, தமிழகத்தில் நீர்நிலைகள் எந்த தொழில்நுட்ப அடிப்படையில் தூர்வாரப்படுகின்றன? என்பது குறித்து, பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு,  இந்த வழக்கை அடுத்த மாதம் 16 ம் தேதிக்கு  ஒத்திவைத்தது.

இது தொடர்பான செய்திகள் :