தாராபுரம் – கடையின் பூட்டை உடைத்து செல்ஃபோன், பணம் கொள்ளை

Home

shadow


        தாராபுரத்தில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 20 ஆயிரம் பணம், செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் உடுமலை ரவுண்டான பகுதியில் செயல்பட்டு வரும் முகமது ரபீக் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையில் நுழைந்த கொள்ளையர்கள், 20 ஆயிரம் மற்றும் சிறிய ரக செல்போன்களை திருடிச் சென்றனர். இன்று வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதன் உரிமையாளர் ரபீக் குற்றப்பிரிவு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதே பகுதியில் சென்ற மாதம் மருந்து கடை, இரும்புக் கடை, மளிகை கடை போன்ற கடைகளில் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளது. இதன் காரணமாக, தாராபுரம் வியாபாரிகளும், பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :