திமுக உடன் திரைமறைவில் பேச வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

Home

shadow

           திமுக உடன் திரைமறைவில் பேச வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

         திமுக உடன் திரைமறைவில் பேச வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

       சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி எப்படி ஆட்சியமைத்ததோ, அதேபோன்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பாஜகவிடம் திமுக சார்பில் தூது அனுப்பப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுவதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

      மகாத்மா காந்தி சுட்டுக்கொலை செய்யப்பட்ட விஷயத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய அவர், சரித்திரத்தை நன்றாக படிக்காத கமல்ஹாசன் அதற்கு, மதச் சாயத்தை பூச நினைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும்,  ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புபடுத்தி பேசும் கே.எஸ்.அழகிரியின் பார்வையில் கோளாறு இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

இது தொடர்பான செய்திகள் :