திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது

Home

shadow

                  திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது


திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் .கே.போஸ் வெற்றி பெற்றார். அந்த வெற்றி செல்லாது எனக் கூறி, திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கிடையே எம்.எல்.. போஸ் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதிக்கு, வழக்கை காரணம் காட்டி இடைத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இதனை வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது. அப்போது, வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்காத தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். தொடர்ந்து மார்ச் 22 –ஆம் தேதிக்குள் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிபதிகள் கூறி இருந்தனர். அதன் படி இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :