தோட்டங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

Home

shadow

கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருப்பூர் மற்றும் உருளைகுடி  பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யவதற்காக தோட்டங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருப்பூர் என்ற கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்காக அங்குள்ள தோட்டத்தில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அங்கு சென்று சோதனை நடத்தியதில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த  சின்னராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மண்ணிற்கு அடியில்  68 லட்சம் ரூபாயை பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் சின்னராஜ் தோட்டத்தினை குத்தகைக்கு எடுத்து பனைத் தொழில் செய்துவரும் அந்தோணிசாமி என்பவரிடம் பணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது தொடர்பான செய்திகள் :