நியாய் திட்டம் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டும் - ராகுல் காந்தி

Home

shadow

                            காங்கிரஸ் அறிவித்துள்ள நியாய் திட்டம், நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 


குஜராத் மாநிலம், பாஜிபுராவில்  நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி ,நியாய் திட்டத்தின்கீழ் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 72,ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று  வாக்குறுதி அளித்துள்ளோம் எனவும் இத்திட்டமானது, பணமதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி அமலாக்கம் ஆகிய நடவடிக்கைகளால் சீர்குலைந்த நமது பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். என தெரிவித்தார். மேலும் இத்திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தினேன் எனவும்  ஏழை மக்களின் வருமானத்தை உறுதி செய்வதற்கு, தாம் எவ்வளவு தொகையை அளிக்க  வேண்டியிருக்கும் என்று கேட்ட்தற்கு. அவர்கள் ஆலோசித்து, 72,ஆயிரம் ரூபாய் வழங்கலாம் கூறியதாக தெரிவித்தார்.  கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது, நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பொய் வாக்குறுதி அளித்தார் எனவும் ஆனால், நாங்கள் நியாய் திட்டத்துக்கான தொகையை கண்டிப்பாக வழங்குவோம் எனவும் அவர் உறுதியளித்தார். 

இது தொடர்பான செய்திகள் :