நீட் தேர்வு குறித்து , தேர்தல் முடிவுக்குகு பின் மத்திய, மாநில அரசுகள் ஒன்றுகூடி முடிவெடுக்கும்; ஹெச்.ராஜா

Home

shadow

 

      நீட் தேர்வு குறித்து, தேர்தல் முடிவுக்குகு பின் மத்திய, மாநில அரசுகள் ஒன்றுகூடி முடிவெடுக்கும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா  தெரிவித்தார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டபு துக்கோட்டை சட்டமன்ற தொகுதி பேராங்குளம் அருகே அதிமுக கூட்டணி வேட்பாளர் தேமுதிகவை சேர்ந்த இளங்கோவன் பொதுமக்களிடம் முதற்கட்டமாக முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஆகியோர் உடனிருந்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 40 இடங்களில் மகத்தான வெற்றிபெறும் எனவும் இது ஒரு இயற்கையாக அமைந்த கூட்டணி என்றும் தெரிவித்தார்.  நிதி ஆதாரங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் திமுக தேர்தல் அறிக்கைவெளியிட்டுள்ளது எனக் குறிப்பிட்ட அவர்திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்றுக் காகிதம் எனவும், நீட் தேர்வு குறித்து தேர்தல் முடிவுக்குகு பின் மத்திய மாநில அரசுகள் ஒன்றுகூடி முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :