நேர்மையான முறையில் மக்கள் ஓட்டுக்களைப் மக்கள் நீதி மய்யம் பெற்றுள்ளது.

Home

shadow

நேர்மையான முறையில் எனது கட்சி வேட்பாளர்கள் ஓட்டுக்களைப் பெற்றுள்ளனர். எங்களது வேட்பாளர்களை வெற்றி வேட்பாளர்களாகத்தான் நான் கருதுகிறேன். அற்புதமான உறுதியையும், அரவணைப்பையும் மக்கள் எங்களுக்குக் கொடுத்துள்ளனர். இந்த அற்புதமான வாக்குகளை அளித்த மக்களுக்கு என் நன்றிகள். எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர். நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கையை இது அளித்துள்ளது. நேர் வழியில் சென்றாலும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் கொடுத்துள்ளனர். தேர்தல் தோல்வி கண்டு நாங்கள் துவண்டு போய் விடவில்லை. தமிழக மக்களுக்கு தொடர்ந்து செயலாற்றுவோம். புதிதாக உருவான கட்சிக்கு மக்கள் அளித்துள்ள இந்த ஆதரவு மிகப் பெரியது. மக்களிடம் வெகுவாக எங்களைக் கொண்டு சேர்த்தது ஊடகங்கள்.
துவண்டு விடாமல் நெஞ்சு நிமிர்த்தி தொடர்ந்து கட்சியை கொண்டு செல்வேன். நாங்க எப்பவுமே ஏ டீம்.. நேர்மையோட ஏ டீம். தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பகுதியாக கருத வேண்டும். வெற்றி மாநிலங்களுக்கு இணையாக தமிழகத்தையும் மோடி கருத வேண்டும். தமிழகஅரசியலில்  எந்த வெற்றிடமும் இல்லை, தலைவர்கள் மறைவதால் வெற்றிடம் ஏற்படுவதில்லை. ஹைட்ரோகார்பன் திட்டமே வேண்டாம் என்று மக்கள் நீதி மய்யம் சொல்லாது, மக்கள் வசிக்கும் பகுதிகள், விவசாய நிலங்களில் அதை எடுக்கக் கூடாது என்பதே எங்களது கருத்து . ஒரு தமிழனாக, இந்தியனாக, இந்தியக் குடிமகனாக இதை நான் பிரதமருக்கு வைக்கிறேன். பணப் புயல் வீச்சுக்கு மத்தியில் எங்களுக்கு வாக்குகள் கிடைத்தது சாதனையே. கிராமப்புறங்களில் எங்களுக்கு வாக்குகள் கிடைக்காமல் போக காரணம் பாதுகாக்கப்பட்ட ஏழ்மையே. அரசியல் கட்சிகள் தங்களது ஆதாயத்துக்காக ஏழ்மையை அகற்றாமல் பாதுகாக்கின்றன. பெரும் கடமை உள்ளது என்பதை மக்கள் உணர்த்தியுள்ளனர். இதுபோன்ற நேர்மையான வாக்காளர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம்  தலைவர் கமல்ஹாசன் கூறினார். 

இது தொடர்பான செய்திகள் :