பன்வாரிலால் புரோஹித் ராமேஸ்வரத்தில் 30 புனித தீர்த்தங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்

Home

shadow

         ராமேஸ்வரத்தில் புதுப்பிக்கப்பட்ட 30 தீர்த்தங்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மற்றும் கோவிலை சுற்றிலும் உள்ள பகுதிகளில் 64 புனித தீர்த்தங்கள் இருந்தன. 1964-இல் ஏற்பட்ட புயலுக்கு பிறகு கோயிலுக்கு வெளியில் இருந்த தீர்த்தங்கள் பராமரிப்பின்றி சிதைந்து போயின. இதனால் பக்தர்கள் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் மட்டும் புனித நீராடி செல்லும் நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில் விவேகானந்த கேந்திரத்தின் பசுமை ராமேஸ்வரம் அமைப்பு சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் ஆகிய இடங்களில் புதைந்துபோன 30 தீர்த்தங்களை கண்டுபிடித்து 5 கோடிரூபாய் செலவில் புனரமைப்பு செய்தனர். இவ்வாறு புனரமைக்கப்பட்ட தீர்த்தங்களை மக்கள் பயன்பாட்டுக்கு இன்று நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்பக்தர்களுக்கு அர்ப்பணித்தார். தங்கச்சிமடம் அருகில் உள்ள மங்கள தீர்த்த குளம் அருகில் நடைபெற்ற பூஜைக்குப் பின்னர்  கலசத்தில் உள்ள தீர்த்தங்களை மங்கள தீர்த்தத்தில் ஊற்றி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொது மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் விவேகானந்த கேந்திரத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்           

இது தொடர்பான செய்திகள் :