பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

Home

shadow

                     தென்சென்னை மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில்  வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு  தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் வாக்கு பதிவு நிறைவடைந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையமான நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. வாக்கு எண்ணும் மையங்களை சுற்றிலும் காவல்துறையினரின் 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான செய்திகள் :